ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

போக்சோ சட்டத்தில் ஹோமியோபதி மருத்துவர் கைது

காங்கயம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஹோமியோபதி மருத்துவரை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :10 ஜனவரி 2021, 12:40 pm

DIN

காங்கயம்: காங்கயம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஹோமியோபதி மருத்துவரை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

திருப்பூர், ஜே.பி. நகரைச் சேர்ந்தவர் ஜீவன்குமார் (50). இவர் ஊத்துக்குளி பகுதியில் ஹோமியோபதி மருத்துவமனை மற்றும் மருந்துக் கடை வைத்து நடத்தி வருகிறார். அங்கு பணிக்கு வந்த 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, பாலியல் ரீதியாக துன்புறுத்தி, பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், காங்கயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, விசாரணைக்குப் பின்னர் ஜீவன்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.