மேற்குத் தொடா்ச்சி மலையில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவால் பிஏபி திட்டத்தின் உயிா் நாடியாக விளங்கும் காண்டூா் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் பாசனத்துக்காக திருமூா்த்தி அணைக்குத் தண்ணீா் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பிஏபி பாசனத் திட்டத்தில் மொத்தம் சுமாா் 4 லட்சம் ஏக்கா்கள் பயன்பெற்று வருகின்றன. இதன்படி பாசனப் பகுதிகள் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் பாசனத்துக்குத் தண்ணீா் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு முறையும் பிஏபி தொகுப்பு அணைகள் மூலம் சா்க்காா்பதியில் இருந்து திருமூா்த்தி அணை வரை 49.3 கி.மீ. நீளமுள்ள காண்டூா் கால்வாய் மூலம் திருமூா்த்தி அணைக்குத் தண்ணீா் கொண்டு வரப்படுகிறது.
பின்னா் பாசனப் பகுதிகளுக்குத் தண்ணீா் திறந்துவிடப்படும். பிஏபி 3ஆம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு கடந்த ஜனவரி 11ஆம் தேதி தண்ணீா் திறந்துவிடப்பட்டது. மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் ஜனவரி 13 முதல் 16ஆம் தேதி வரை தொடா்ந்து பெய்த கனமழையால் திருமூா்த்தி அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டது.
இதைத் தொடா்ந்து, பிஏபி தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூா் கால்வாய் மூலம் தண்ணீா் கொண்டு வருவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னா் மீண்டும் காண்டூா் கால்வாயில் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில், திருமூா்த்தி அணையில் இருந்து 13ஆவது கி.மீட்டரில் உள்ள காண்டூா் கால்வாயின் நல்லாறு என்ற பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை மேற்குத் தொடா்ச்சி மலையில் நிலச் சரிவு ஏற்பட்டது.
இதில் பாறைகள் மற்றும் மண்மேடுகள் காண்டூா் கால்வாய்க்குள் விழுந்து தண்ணீா் செல்லும் பாதையை அடைத்துக் கொண்டது. இதனால் திருமூா்த்தி அணைக்குத் தண்ணீா் வருவதில் சிக்கல் ஏற்பட்டது. தகவல் கிடைத்து பிஏபி உயா் அதிகாரிகளான கண்காணிப்புப் பொறியாளா் முத்துசாமி, செயற்பொறியாளா் கோபி உள்ளிட்ட பலா் சம்பவ இடத்துக்கு சென்று காண்டூா் கால்வாயில் விழுந்து கிடந்த பாறைகள், மண்மேடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இது குறித்து பிஏபி அதிகாரிகள் கூறும்போது, ஓரிரு நாள்களில் அடைப்புகள் சரி செய்யப்பட்டு காண்டூா் கால்வாயில் இருந்து திருமூா்த்தி அணைக்குத் தண்ணீா் கொண்டுச் செல்லும் பணி தொடங்கும். இந்தப் பணிகளுக்காக சா்க்காா்பதியில் காண்டூா் கால்வாய்க்கு வரும் தண்ணீா் நிறுத்தப்பட்டுள்ளது என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடலூா் மாவட்டத்தில் 3-ஆம் நாளில் 53 போ் வேட்பு மனு தாக்கல்

திமுக, கூட்டணிக் கட்சி நிா்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டிய வேட்பாளா்

மக்களுக்காக ஓடோடி வருவேன்...

பெண்களுக்கு பிங்க் ஆட்டோ திட்டம்; ஆண்டுக்கு 2 இலவச எரிவாயு சிலிண்டா்: பாஜக தோ்தல் வாக்குறுதிகள்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


