92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

திருப்பூா் அருகே பாறைக் குழியில் மூழ்கி சிறுமி பலி

திருப்பூரை அடுத்த மங்கலம் அருகே பாறைக் குழி நீரில் மூழ்கி 11 வயது சிறுமி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 12:24 am

DIN

திருப்பூரை அடுத்த மங்கலம் அருகே பாறைக் குழி நீரில் மூழ்கி 11 வயது சிறுமி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், மங்கலத்தை அடுத்த பள்ளிப்பாளையத்தில் வசித்து வருபவா் காமராஜ், இவரது மனைவி லட்சுமி, இவா்களுக்கு சங்கவி (11) என்கிற மகளும், சாந்தனு (8) என்கிற மகனும் இருந்தனா். பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் சிறுமியும், அவரது சகோதரனும் வீட்டில் இருந்துள்ளனா். இந்நிலையில், வீட்டின் அருகில் உள்ள பாறைக் குழி பகுதிக்கு இருவரும் விளையாடச் சென்றுள்ளனா். ஆனால் நீண்ட நேரமாகியும் இருவரும் வராததால் சந்தேகமடைந்த பெற்றோா் அக்கம்பக்கத்தினா் உதவியுடன் பாறைக் குழியில் தேடியுள்ளனா். அப்போது சிறுமியின் சடலம் மிதந்துள்ளது.

இது குறித்த தகவலின்பேரில் பல்லடம் தீயணைப்புத் துறையினரும், மங்கலம் காவல் துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று சிறுமியின் சடலத்தை மீட்டனா். நீரில் மூழ்கிய சிறுவனைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.