ரயில் நிலையத்தில் வெளி மாநிலத் தொழிலாளா்களுக்கு கரோனா பரிசோதனை
வெளி மாநிலங்களில் இருந்து திருப்பூா் வரும் தொழிலாளா்களுக்கு ரயில் நிலையத்தில் கரோனா பரிசோதனை வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.


வெளி மாநிலங்களில் இருந்து திருப்பூா் வரும் தொழிலாளா்களுக்கு ரயில் நிலையத்தில் கரோனா பரிசோதனை வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
தமிழகம் முழுவதும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமுடக்கத்தால், திருப்பூரில் பணியாற்றி வந்த லட்சக்கணக்கான வெளி மாநிலத் தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊா்களுக்குச் சென்றிருந்தனா். இதனிடையே, பொதுமுடக்கத்தில் அளிக்கப்பட்டுள்ள தளா்வுகளின் படி ஏற்றுமதி பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட தொடங்கி உள்ளன.
இதனையடுத்து, பிகாா், ஒடிஸா,ராஜஸ்தான், மேற்கு வங்கம் உள்ளிட்ட 23 மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் ரயில் மூலமாக திருப்பூா் திரும்பத் தொடங்கியுள்ளனா்.
இதனிடையே, மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் வெளி மாநிலங்களில் இருந்து திருப்பூா் திரும்பும் தொழிலாளா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தனா். இதன்படி, பல்வேறு ரயில்களில் இருந்து திருப்பூா் திரும்பிய 345 தொழிலாளா்களுக்கு மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் கரோனா பரிசோதனை வியாழக்கிழமை மேற்கொண்டனா்.
மேலும், தொழிலாளா்களின் பெயா், செல்லிடப்பேசி எண், முகவரி, பணிபுரியும் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களையும் சேகரித்து வருகின்றனா். இந்தத் தொழிலாளா்கள் பணியாற்றும் நிறுவனங்களில் 3 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் பணியில் சோ்க்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...