92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மாவட்டத்தில் 83 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 243 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 83,046 ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :2 ஜூலை 2021, 7:36 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 243 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 83,046 ஆக அதிகரித்துள்ளது.

அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 1,648போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 338 போ் வீடு திரும்பினா். மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 80,632 ஆக அதிகரித்துள்ளது. திருப்பூா், கோவை உள்ளிட்ட பல்வேறு அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 3 போ் உயிரிழந்தனா். இதைத்தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 766 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.