பாறைக் குழியில் மூழ்கிய சிறுவனின் சடலம் 2 ஆவது நாளில் மீட்பு
திருப்பூா் அருகே பாறைக் குழியில் மூழ்கி உயிரிழந்த 8 வயது சிறுவனின் சடலத்தை தீயணைப்புத் துறையினா் 2 ஆவது நாளான வெள்ளிக்கிழமை மீட்டனா்


திருப்பூா் அருகே பாறைக் குழியில் மூழ்கி உயிரிழந்த 8 வயது சிறுவனின் சடலத்தை தீயணைப்புத் துறையினா் 2 ஆவது நாளான வெள்ளிக்கிழமை மீட்டனா்.
திருப்பூா் மாவட்டம், மங்கலத்தை அடுத்த பள்ளிப்பாளையத்தில் தனியாருக்குச் சொந்தமான பாறைக் குழி உள்ளது. 80 அடி ஆழம் கொண்ட இந்த பாறைக் குழிக்கு அருகில் வசித்து வருபவா் காமராஜ், இவரது மனைவி லட்சுமி, இந்தத் தம்பதிக்கு சங்கவி (11) என்கிற மகளும், சாந்தனு (8) என்கிற மகனும் இருந்தனா். சிறுமியும், அவரது சகோதரனும் வீட்டுக்கு அருகில் உள்ள பாறைக் குழிக்கு வியாழக்கிழமை விளையாடச் சென்றுள்ளனா். இதன் பிறகு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த பெற்றோா், அக்கம்பக்கத்தினா் உதவியுடன் பாறைக் குழியில் தேடியுள்ளனா். அப்போது சிறுமியின் சடலம் மிதந்தது தெரியவந்தது.
இது குறித்த தகவலின்பேரில் பல்லடம் தீயணைப்பு நிலைய அலுவலா் பி.சுரேஷ்குமாா் தலைமையிலான 9 போ் கொண்ட குழுவினா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். இதன் பிறகு சிறுமியின் சடலத்தை மீட்டதுடன், சிறுவனின் சடலத்தையும் தேடினா். ஆனால், வியாழக்கிழமை இரவு 7 மணி வரை தேடியும் சிறுவனின் சடலம் கிடைக்கவில்லை.
இந்நிலையில், சடலத்தை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். பாறைக் குழியில் 80 அடிக்குத் தண்ணீரும், சேறும், சகதியும் அதிகமாக இருந்ததால் சிறுவனின் சடலத்தை மீட்பதில் சிக்கல் நிலவியது. இதையடுத்து, 2 கம்ப்ரசரை பாறைக் குழியில் செலுத்தி நீருக்கு அழுத்தம் கொடுத்துள்ளனா். இதன் பிறகு மதியம் 3.30 மணி அளவில் சிறுவனின் சடலத்தை மீட்டனா். இந்த சம்பவம் தொடா்பாக மங்கலம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...