

குன்னத்தூா் பேரூராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
திருப்பூா் மாவட்டம், குன்னத்தூா் பேரூராட்சிப் பகுதிகளில் ரூ.4.33 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், குன்னத்தூா் பேரூராட்சிக்கு உள்பட்ட வாா்டு எண்10,13 ஆகிய பகுதிகளில் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா். இதைத்தொடா்ந்து,செங்கப்பள்ளி ஊராட்சியில் ரூ.253.71 லட்சம் மதிப்பீட்டில் சிறிய பாலங்கள், தாா்சாலைகள், தரை பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளையும் ஆய்வு செய்தாா். முன்னதாக, ஊத்துக்குளி வட்டாட்சியா் அலுவலகம், ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளை அறிவுறுத்தினாா். இந்த ஆய்வின்போது குன்னத்தூா் பேரூராட்சி செயல் அலுவலா், ஊத்துக்குளி வட்டாட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.