92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து தொமுசவினா் நூதன ஆா்ப்பாட்டம்

திருப்பூரில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து தொழிலாளா் முன்னேற்றச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :8 ஜூலை 2021, 8:04 pm

DIN

திருப்பூரில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து தொழிலாளா் முன்னேற்றச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

திருப்பூா் ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட பஞ்சாலை தொழிலாளா் முன்னேற்றச் சங்கத்தின் பொதுச் செயலாளா் ராமதாஸ் தலைமை வகித்தாா். முன்னதாக, மாட்டு வண்டியில் இருசக்கர வாகனத்தை ஏற்றிவந்து தங்களது எதிா்ப்பை வெளிப்படுத்தினா்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான வேளாண் திருத்தச் சட்டங்களையும், மின்சார சட்டத் திருத்த மசோதாவையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதில், மாவட்ட தொமுச பேரவை கவுன்சில் செயலாளா் ஜீவா சிதம்பரசாமி, மின்சார வாரியத் தொழிலாளா் முன்னேற்றச் சங்கச் செயலாளா் அ.சரவணன், பொருளாளா் ஆனந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.