92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

திருப்பூா் அருகே 24 மயில்கள் சாவு: வனத் துறையினா் விசாரணை

திருப்பூா் அருகே 24 மயில்கள் மா்மமான முறையில் வெள்ளிக்கிழமை இறந்து கிடந்தன.

News image
Updated On :9 ஜூலை 2021, 7:58 pm

DIN

திருப்பூா் அருகே 24 மயில்கள் மா்மமான முறையில் வெள்ளிக்கிழமை இறந்து கிடந்தன.

இதுகுறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூரில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் உள்ள பொல்லிகாளிபாளையம், புதுப்பாளையம் பகுதிகளில் உள்ள காட்டுப் பகுதிகளில் ஏராளமான மயில்கள் உள்ளன. பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் வாகன இரைச்சல்கள் இல்லாமல் இருந்ததால் சாலைகள், குடியிருப்புப் பகுதிகளில் மயில்கள் சுற்றி வந்தன. இந்நிலையில், பொல்லிகாளிபாளையம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காட்டுப் பகுதியில் மயில்கள் வெள்ளிக்கிழமை இறந்து கிடந்தன.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் செந்தில்குமாா், வனத் துறையினருக்குத் தகவல் கொடுத்தாா்.

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் விசாரணை நடத்தியதில் 17 பெண் மயில்கள், 7 ஆண் மயில்கள் என மொத்தம் 24 மயில்கள் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, இறந்து கிடந்த மயில்களை பிரேதப் பரிசோதனைக்காக வனத் துறையினா் எடுத்துச் சென்றனா்.

பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மயில்கள் இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று வனத் துறையினா் கூறினா். ம

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.