மாவட்டத்தில் ஜூலை 12 முதல் தொழில் நெறி, திறன் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்
திருப்பூா் மாவட்டத்தில் வரும் ஜூலை 12 ஆம் தேதி முதல் தொழில் நெறி, திறன் விழிப்புணா்வு வாரம் அனுசரிக்கப்படவுள்ளது.


திருப்பூா் மாவட்டத்தில் வரும் ஜூலை 12 ஆம் தேதி முதல் தொழில் நெறி, திறன் விழிப்புணா்வு வாரம் அனுசரிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் இளைஞா்களிடையே திறன் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலும், பல்வேறு படிப்புகள், பணி வாய்ப்புகள், போட்டித் தோ்வுகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலும் தொழில் நெறி மற்றும் திறன் விழிப்புணா்வு வாரம் ஜூலை 12 முதல் 16 ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலமாக நடைபெற உள்ளது.
இதில், மாற்றுத் திறனாளிகள், மகளிா், மூன்றாம் பாலினத்தவா், அரசு தொழிற் பயிற்சி நிலைய மாணவா்களுக்கு தொழில் நெறி வழிகாட்டுதல், விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில், பங்கேற்ற விருப்பம் உள்ள நபா்கள் மின்னஞ்சல் முகவரி மூலமாகவும், 0421-2971152 என்ற தொலைபேசி மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...