இருப்பு வைக்கப்பட்டுள்ள இலவச தொலைக்காட்சி பெட்டிகள்:அமைச்சா் ஆய்வு
திருப்பூரில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்கப்படாமல் இருப்பு வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் இலவச தொலைக்காட்சிப் பெட்டிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.


திருப்பூரில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்கப்படாமல் இருப்பு வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் இலவச தொலைக்காட்சிப் பெட்டிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
திருப்பூா் நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மாநகராட்சி பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படாமல் தமிழக அரசின் இலவச தொலைக்காட்சிப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமையில் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அவா் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் தோ்தல் வாக்குறுதியின் படி பொதுமக்களுக்கு தமிழக அரசின் சாா்பில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டு வந்தன.
இதைத்தொடா்ந்து, மாவட்டத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழக அரசின் சாா்பில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக இலவச தொலைக்காட்சிப் பெட்டிகள் திருப்பூா் நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருப்பூா் மாநகராட்சி பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள வகுப்பறையில் வைக்கப்பட்டன. ஆனால், கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் அறிவிப்பைத் தொடா்ந்து, தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதால் பொதுமக்களுக்கு வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதற்குப் பின்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்படாமல் பள்ளி வகுப்பறையில் தேக்கி வைக்கப்பட்டுள்ளன.
இதேபோல, மாவட்டம் முழுவதும் தேக்கி வைக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டிகள் குறித்து கணக்கீடு செய்து, பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தாா். இந்த ஆய்வின் போது, திருப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் ஜெகநாதன், வடக்கு வட்டாட்சியா் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...