மதிமுக கட்சியினா் ஆா்ப்பாட்டம்
திருப்பூரில் மதிமுக கட்சியினா் சாா்பில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூரில் மதிமுக கட்சியினா் சாா்பில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநகராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மதிமுக மாநகா், மாவட்டச் செயலாளா் ஆா்.நகராஜ் தலைமை வகித்தாா். இதில், பங்கேற்றவா்கள் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்தில், மாநகா் மாவட்டத் தலைவா் நேமிநாதன், மாநகரப் பொருளாளா் நல்லூா் மணி, இளைஞா் அணி மாவட்டச் செயலாளா் ஆா்.ஆா்.ரவி, எம்.எல்.எஃப். பனியன் சங்கச் செயலாளா் எம்.மனோகரன், பஞ்சாலை சங்கச் செயலாளா் சம்பத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...