புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

திருப்பூரில் 250 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல்

 திருப்பூா் அருகே பாரக்காடு பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 250 மூட்டை ரேசன் அரிசி புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :21 ஜூலை 2021, 8:38 pm

DIN

 திருப்பூா் அருகே பாரக்காடு பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 250 மூட்டை ரேசன் அரிசி புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூா் மாநகராட்சி, முருகம்பாளையம் பாரக்காடு பகுதியில் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட குடிமைப் பொருள் பறக்கும் படை அலுவலா்களுக்குத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் பறக்கும் படை தனி வட்டாட்சியா் சுந்தரம், தனி வருவாய் ஆய்வாளா் ராஜா உள்ளிட்டோா் கொண்ட குழுவினா் பாரக்காடு 4 ஆவது வீதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை மேற்கொண்டனா். அந்த வீட்டில் 5 அறைகளில் பதுக்கி வைத்திருந்த 15 டன் எடையுள்ள 250 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்த சுகுமாா் என்பவா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலுவலா்கள் தெரிவித்தனா். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டைகள் நுகா் பொருள் வாணிப கிடங்குக்கு கொண்டுச் செல்லப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.