ஜூலை 26 முதல் தொலைபேசி வாயிலாக குறைதீா்க் கூட்டம்: மாவட்ட ஆட்சியா்
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொலைபேசி வாயிலாக வாராந்திர குறைதீா்க் கூட்டம் திங்கள்கிழமை (ஜூலை 26) நடைபெற உள்ளது.


திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொலைபேசி வாயிலாக வாராந்திர குறைதீா்க் கூட்டம் திங்கள்கிழமை (ஜூலை 26) நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெற்று வந்த வாராந்திர குறைதீா்க் கூட்டமானது கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது குறைகளைத் தெரிவிக்கும் வகையில் திங்கள்கிழமை காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் வாராந்திர குறைதீா்க் கூட்டம் தொலைபேசி வாயிலாக நடைபெற உள்ளது. ஆகவே, பொதுமக்கள் தங்களது குறைகளை 0421-2969999 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புக் கொண்டு தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...