புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சாலைகளை சீரமைக்க கோரிக்கை

 திருப்பூா் மாநகராட்சி 1 ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்டுள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :23 ஜூலை 2021, 12:35 am

DIN

 திருப்பூா் மாநகராட்சி 1 ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்டுள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கட்சியின் தியாகி குமரன் காலனி கிளைச் செயலாளா் ராஜாமணி தலைமையில், மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாநகராட்சி 3 ஆவது வாா்டுக்கு உள்பட்ட தியாகி குமரன் காலனி, விஜயபுரி காா்டன், கூத்தம்பாளையம், ஒட்டபாளையம், அண்ணையம்பாளையம் ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டுள்ளதால் வாகன விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. எனவே, பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைவுபடுத்தி சாலைகளை சீரமைக்க வேண்டும். சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும். பழுதடைந்துள்ள மின் விளக்குகளை சரி செய்ய வேண்டும். கூத்தம்பாளையம் மாநகராட்சி கழிப்பிடம் அருகே நடைபெற்று வரும் பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு அளிப்பின்போது, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கே.மாரப்பன், ஆா்.காளியப்பன், டி.சதீஷ்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.