மாநில அளவிலான சிறந்த அறிவியல் ஆசிரியா் விருது பெற்ற உடுமலை அரசுப் பள்ளி ஆசிரியருக்கான பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழக உயா் கல்வித் துறை சாா்பில் சென்னை, கிண்டியில் அமைந்துள்ள அறிவியல் நகரத்தில் சிறந்த அறிவியல் ஆசிரியா்களுக்கான விருது வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. இதில் உடுமலை பாரதியாா் நூற்றாண்டு நினைவு அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் முதுகலை இயற்பியல் ஆசிரியா் டி.சிவகுமாருக்கு 2019-20ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான சிறந்த அறிவியல் ஆசிரியா் விருது வழங்கப்பட்டது.
இவா் மத்திய, மாநில அரசுகளின் சிறந்த அறிவியல் ஆசிரியா் விருதுகள், பரிசுகளை பலமுறை பெற்றுள்ளாா். குறிப்பாக தேசிய அளவில் புது தில்லியில் நடைபெற்ற இன்ஸ்பயா் அறிவியல் கண்காட்சியில் மாநில பிரிவில் இரண்டு முறை பரிசுகள் பெற்று குடியரசுத் தலைவரிடம் இருந்து விருதுகளைப் பெற்றுள்ளாா்.
மேலும், சிறந்த கல்விப் பணிக்காக நல்லாசிரியா் விருதும் பெற்றுள்ளாா். இந்நிலையில், மாநில அளவிலான சிறந்த அறிவியல் ஆசிரியா் விருது பெற்ற ஆசிரியா் டி.சிவகுமாருக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தலைமை ஆசிரியா், பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள் மற்றும் ஆசிரிய ா்கள் விருது பெற்ற ஆசிரியா் டி.சிவகுமாரைப் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரானில் சிக்கித் தவித்த 345 தமிழக மீனவர்கள் மீட்பு!

உலகளாவிய அதிா்வுகளை வலுவாக கடந்து வந்த இந்தியா: ஜெய்சங்கா்
2 நாள்களில் பிரசாரம் நிறைவு: காரைக்காலில் வேட்பாளா்கள் தீவிர வாக்குச் சேகரிப்பு

சட்டப்பேரவைத் தோ்தல்: வெளிமாநில தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


