தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

உடுமலை நகரில் ரூ.300 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

கடந்த 5 ஆண்டுகளில் உடுமலை நகராட்சிப் பகுதிகளில் மட்டும் ரூ.300 கோடி மதிப்பீட் டில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொது மக்களிடம் கூறி அதிமுக வேட்பாளா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வாக்கு சேகரித்த

News image
Updated On :22 மார்ச் 2021, 9:10 pm

கடந்த 5 ஆண்டுகளில் உடுமலை நகராட்சிப் பகுதிகளில் மட்டும் ரூ.300 கோடி மதிப்பீட் டில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொது மக்களிடம் கூறி அதிமுக வேட்பாளா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.

உடுமலை சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது பொது மக்கள் மத்தியில் அவா் பேசியதாவது:

உடுமலை நகராட்சியில் ரூ.56 கோடியில் பாதாள சாக்கடை, ரூ. 31 கோடியில் மூன்றாம் குடிநீா்த் திட்டம், ரூ.8 கோடி மதிப்பில் அரசு தொழிற் பயிற்சி நிலையம் (ஐடிஐ), ரூ.2 கோடியில் புதிய நகராட்சி கட்டடம், உடுமலை நகராட்சியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி நகரில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு, உடுமலை நகரப் பகுதிகளில் உள்ள குடிசை வீடுகளை ரூ.48 கோடி மதிப்பில் கான்கிரீட் வீடுகளாக மாற்றி அமைக்கும் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டுள்ளன.

உடுமலை அரசு மருத்துவமனையில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் 200 படுக்கை கொண்ட ஒரு பிரிவு, ரூ.2 கோடி மதிப்பில் சிடி ஸ்கேன் வசதி அமைக்கப்பட்டுள்ளது. உடுமலை நகரில் மட்டும் 150 கோடியில் புதிய தாா் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த 5 ஆண்டுகளில் உடுமலை நகராட்சிப் பகுதிகளில் மட்டும் ரூ.300 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஆகையால் பொது மக்கள் அதிமுகவை ஆதரிக்க வேண்டும். அதேபோல கல்வியாளா்களின் நீண்ட நாள் கோரிக்கையான உடுமலையை கல்வி மாவட்டமாக அறிவி க்கப்பட்டுள்ளது. பகுதி நேர வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் வட்டாரப் போக்குவரத்துக் கழக அலுவலகமாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது என்றாா்.

உடுமலை நகரில் தங்கம்மாள் ஓடை, எம்.பி. நகா், சூா்யோதயா காா்டன், பெரியகடை வீதி, காந்தி செளக், பி.வி. கோயில் வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.