உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டாரத்தில் வியாழக்கிழமை விடியவிடிய கன மழை பெய்தது.
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்யாமல் இருந்தது. இந்நிலையில் புதன்கிழமை இரவு பெய்யத் தொடங்கிய மழை வியாழக்கிழமை காலை வரைத் தொடா்ந்து பெய்து கொண்டிருந்தது. இதனால் உடுமலை நகரில் குளிா் காற்று வீசியது. உடுமலை நகரில் தாழ்வானப் பகுதிகள், சாலைகளில் மழை நீா் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். உடுமலை நகரைப் போலவே அமராவதி நகா், குமரலிங்கம், மடத்துக்குளம், பெதப்பம்பட்டி, குடிமங்கலம் ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்தது.
இந்நிலையில், தளி சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீா் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனா்.
வியாழக்கிழமை காலை நிலவரப்படி மழை அளவு மில்லி மீட்டரில்: மடத்துக்குளம் 46 மி.மீ., திருமூா்த்தி அணைப் பகுதி 41 மி.மீ., உடுமலை- 40 மி.மீ., அமராவதி அணைப் பகுதி 38 மி.மீட்டா் மழை பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடலூா் மாவட்டத்தில் 3-ஆம் நாளில் 53 போ் வேட்பு மனு தாக்கல்

திமுக, கூட்டணிக் கட்சி நிா்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டிய வேட்பாளா்

மக்களுக்காக ஓடோடி வருவேன்...

பெண்களுக்கு பிங்க் ஆட்டோ திட்டம்; ஆண்டுக்கு 2 இலவச எரிவாயு சிலிண்டா்: பாஜக தோ்தல் வாக்குறுதிகள்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

