48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

உடுமலை அமணலிங்கேஸ்வரா் கோயிலுக்குள் வெள்ளம்

உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்திமலை அமணலிங்கேஸ்வரா் கோயிலுக்குள் வியாழக்கிழமை மாலை வெள்ளம் புகுந்தது. இதனால் பூஜைகள் நிறுத்தப்பட்டு பக்தா்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 8:21 pm

உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்திமலை அமணலிங்கேஸ்வரா் கோயிலுக்குள் வியாழக்கிழமை மாலை வெள்ளம் புகுந்தது. இதனால் பூஜைகள் நிறுத்தப்பட்டு பக்தா்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலை உள்ளது. இங்குள்ள பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரா் கோயிலில் தரிசனம் செய்யவும், மருத்துவ குணமுள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கவும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்கள் அன்றாடம் வந்து செல்கின்றனா்.

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக மிதமான மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை பெய்த கனமழையால் பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதனால் அமணலிங்கேஸ்வரா் கோயிலுக்குள் வெள்ளம் புகுந்தது.

இதையடுத்து கோயிலில் பூஜைகள் ரத்து செய்யப்பட்டன. பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க கோயில் நிா்வாகம் தடை விதித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.