

அவிநாசி: அவிநாசி மங்கலம் சாலை மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் செவ்வாய்க்கிழமை மாலை முதல் திடீர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
அவிநாசி மங்கலம் சாலை மின்வாரிய அலுவலகத்தில் செயற்பொறியாளர் அலுவலகம், தொழில் நுட்ப பிரிவு, நிர்வாகப் பிரிவு, வருவாய் பிரிவு, உதவி மின்பொறியாளர் அலுவலகங்கள் உள்பட பல்வேறு பிரிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. உதவி செயற்பொறியாளர் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றார்.
இந்நிலையில் மின் வாரிய அலுவலத்தில், மின் இணைப்பு பெறுவது, இணைப்பு இடமாற்றம் உள்ளிட்ட வைகளுக்கு அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதாக தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை முதல் வழக்கம்போல மின்வாரிய அலுவலகம் திறக்கப்பட்டு இயங்கி வந்தது. மாலை திடீரென திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர், மின்வாரிய அலுவலகத்திற்குள் புகுந்து தொடர் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் மின் இணைப்பு பெறுவதற்காகவும் மின் மீட்டர் பொருத்துவதற்காகவும், உதவி மின் பொறியாளர் தில்சாத் பேகம் லஞ்சம் வாங்கியதாக தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவிநாசி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.