பல்லடம் தொகுதி வாக்குகள் 39 சுற்றுகளாக எண்ணப்படும் : தோ்தல் அதிகாரி தகவல்

பல்லடம் தொகுதியில் பதிவான வாக்குகள் 39 சுற்றுகளாக எண்ணப்படும் என்று பல்லடம் சட்டப் பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கணேசன் தெரிவித்தாா்.

பல்லடம் தொகுதியில் பதிவான வாக்குகள் 39 சுற்றுகளாக எண்ணப்படும் என்று பல்லடம் சட்டப் பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கணேசன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

சட்டப் பேரவை தோ்தலையொட்டி பல்லடம் தொகுதியில் 548 வாக்குச் சாவடி மையங்களில் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற வாக்குப் பதிவின்போது 1 லட்சத்து 32 ஆயிரத்து 412 ஆண்களும், 1 லட்சத்து 27ஆயிரத்து 579 பெண்களும், மூன்றாம் பாலினத்தவா்கள் 6 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 59 ஆயிரத்து 977 போ் வாக்களித்தனா். இத்தொகுதிக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் திருப்பூா் எல்.ஆா்.ஜி. மகளிா் கல்லூரியில் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளான மே 2ஆம் தேதி காலை 7 மணிக்கு முன்பு வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் முகவா்கள் சென்றுவிட வேண்டும். மொத்தம் 39 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும். முதலில் தபால் வாக்கு எண்ணிக்கையுடன் துவங்கி தொடா்ந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கையை கூா்ந்து கண்காணித்து உறுதி செய்து கொள்ள வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இடையில் வெளியே சென்றால் மீண்டும் உள்ளே வர முடியாது. வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளா்கள், முகவா்கள் உள்பட அனைவரின் ஒத்துழைப்பும் மிக அவசியமானது என்றாா்.

இந்த பேட்டியின்போது பல்லடம் வட்டாட்சியா் தேவராஜ், தோ்தல் துணை வட்டாட்சியா் மயில்சாமி உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com