காங்கயத்தில் மின் வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 17th August 2021 12:46 AM | Last Updated : 17th August 2021 12:46 AM | அ+அ அ- |

காங்கயம்: காங்கயத்தில் மின்சார ஊழியா்கள் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
காங்கயம், பழையகோட்டை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு
கோட்டப் பொறியாளா் சுந்தரம் தலைமை வகித்தாா். இதில் சரண்டா் லீவுத் தொகை மற்றும் பஞ்சப்படி உயா்வினை
வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கங்களை எழுப்பினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட மின் வாரிய ஊழியா்கள் கலந்துகொண்டனா்.