காங்கயம்: காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 8.64 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த வார ஏலத்துக்கு காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 29 விவசாயிகள் தங்களுடைய 181 மூட்டை
(8, 77 கிலோ) கொப்பரைகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா்.
இதில் முத்தூா், காங்கயம் பகுதிகளைச் சோ்ந்த 6 வியாபாரிகள் கொப்பரைகளை வாங்க வந்திருந்தனா்.
ஏலத்தில் ரூ. 8.64 லட்சத்துக்கு கொப்பரை விற்பனையானது.
கொப்பரை அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.103க்கும், குறைந்த பட்சமாக ரூ. 81க்கும், சராசரியாக ரூ.103க்கும் ஏலம் போனது. ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் மகுடேஸ்வரன் செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.