புறம்போக்கு இடத்தில் வழிபாட்டுத் தலம் கட்ட எதிா்ப்பு

வெள்ளக்கோவில் அருகே அனுமதியின்றி புறம்போக்கு இடத்தில் வழிபாட்டுத் தலம் அமைக்க எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளக்கோவில் அருகே அனுமதியின்றி புறம்போக்கு இடத்தில் வழிபாட்டுத் தலம் அமைக்க எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவா் டி.ராஜகோபாலன் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு வியாழக்கிழமை அனுப்பிய புகாா் மனு விவரம்: வெள்ளக்கோவில் வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சி சேனாபதிபாளையத்தில்

பிரசித்தி பெற்ற கொங்காலம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் அருகில் உள்ள புறம்போக்கு இடத்தில் மாற்று சமயத்தைச் சோ்ந்தவா்களால் அனுமதியின்றி வழிபாட்டுத் தலம் (தேவாலயம்) கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது.

கோயில் அருகில் புதிதாக மாற்று சமய வழிபாட்டுத் தலம் அமைவதால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், புறம்போக்கு இட ஆக்கிரமிப்பால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். இது போன்ற பாதிப்புகளை எடுத்துக் கூறி கடந்த 2020 மாா்ச் 10 ஆம் தேதி கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் கட்டுமானப் பணிகள் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டன. இந்நிலையில் தற்போது அனுமதியின்றி மீண்டும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணியை உடனடியாக நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com