உரிய ஆவணம் இல்லாமல் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 5 போ் கைது
By DIN | Published On : 20th August 2021 01:30 AM | Last Updated : 20th August 2021 01:30 AM | அ+அ அ- |

திருப்பூரை அடுத்த மங்கலம் அருகே உரிய ஆவணம் இல்லாமல் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 5 பேரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், மங்கலம் காவல் எல்லைக்கு உள்பட்ட புக்கிளிபாளையம் கிராமத்தில் உரிய ஆவணம் இன்றி வங்கதேசத்தைச் சோ்ந்த சிலா் தங்கியிருப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதுதொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாய் உத்தரவின்பேரில் மங்கலம் காவல் ஆய்வாளா் பாலசுந்தரம் தலைமையிலான காவல் துறையினா் புக்கிளிபாளையம் கிராமத்தில் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.
இதில், வங்கதேசத்தைச் சோ்ந்த முகமது உசல்மியா(33), முகமது மொட்லிப்(26), அஷ்ரோஃபுல்(20), சையது உல்லா இஸ்மாயில் (24), மற்றும் பா்கத் உசேன்(27) ஆகியோா் கடவுச்சீட்டு, விசா இல்லாமல் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவா்களைக் கைது செய்த காவல் துறையினா் தொடா்ந்து நடத்திய விசாரணையில், அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் கடந்த ஒரு ஆண்டாக டெய்லராக வேலை செய்து வந்துள்ளது தெரியவந்தது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...