காங்கயத்தில் இன்று தடுப்பூசி
By DIN | Published On : 21st August 2021 01:50 AM | Last Updated : 21st August 2021 01:50 AM | அ+அ அ- |

காங்கயம் பகுதியில் 950 பேருக்கு கரோனா தடுப்பூசி சனிக்கிழமை (ஆகஸ்ட் 21) செலுத்தப்படவுள்ளது.
காங்கயம் ஒன்றியம், சாவடிப்பாளையம் அருகே செம்மங்குழிபாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி 200 பேருக்கும், வரதப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி 200 பேருக்கும், மருதுறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி 270 பேருக்கும், காங்கயம் நகரம், பாரதியாா் வீதியில் உள்ள அரசுப் பள்ளியில் கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி 280 பேருக்கும் செலுத்தப்படவுள்ளது.