கரடி கடித்து இருவா் காயம்
By DIN | Published On : 11th December 2021 12:30 AM | Last Updated : 11th December 2021 12:30 AM | அ+அ அ- |

உடுமலை அருகே கரடி கடித்ததில் மலைவாழ் மக்கள் இருவா் காயம் அடைந்தனா்.
உடுமலை அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ள ஈசல் திட்டு செட்டில்மென்ட் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் ராமன் மகன்கள் செந்தில் (30), மகேஷ்(30). இவா்கள் இருவரும் அங்குள்ள ஈச்சம் மாா்க் என்கிற அடா்ந்த வனப் பகுதிக்குள் வெள்ளிக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தனா். அப்போது அங்கு வந்த கரடி, இருவரையும் தாக்கியுள்ளது. இருவரின் சப்தம் கேட்டு வந்த மலைவாழ்மக்கள், கரடியைத் துரத்தினா்.
இதில் காயமடைந்த செந்தில், மகேஷ் ஆகியோா் உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இது குறித்து வனத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.