‘போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கொடிக் கம்பங்கள் அகற்றப்படும்’
By DIN | Published On : 11th December 2021 12:30 AM | Last Updated : 11th December 2021 12:30 AM | அ+அ அ- |

திருப்பூரில் போக்குவரத்துக்கு இடையூறாக அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்கள் அகற்றப்படவுள்ளதாக மாநகர ஆணையா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக பல்வேறு கொடிக் கம்பங்கள் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளன. உயா் நீதிமன்ற உத்தரவின்படி, திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 4 மண்டலப் பகுதிகளிலும் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக வைக்கப்பட்டுள்ள அனுமதியற்ற கொடிக் கம்பங்களை வரும் டிசம்பா் 13,14,15 ஆகிய 3 நாள்களுக்குள் அகற்ற அந்தந்த மண்டல அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆகவே, அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்றிட பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.