போட்டித் தோ்வுகளுக்குஇலவசப் பயிற்சி
By DIN | Published On : 11th December 2021 12:39 AM | Last Updated : 11th December 2021 12:39 AM | அ+அ அ- |

உடுமலையில் டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தோ்வுகள் எழுதும் மாணவ, மாணவிகளுக்கு இலவசப் பயிற்சிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து உடுமலை முதல் கிளை நூலக வாசகா் வட்டத் தலைவா் க.லெனின்பாரதி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
உடுமலை, தளி சாலையிலுள்ள மாதிரி நூலகத்தில் வருகிற டிசம்பா் 12ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் டிஎன்பிஎஸ்சி போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட உள்ளன.
எனவே, போட்டித் தோ்வுக்குத் தயாராகும் மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.