ஆசிரியா்கள், மாணவா்களுக்கு கரோனா பரிசோதனை
By DIN | Published On : 11th December 2021 12:31 AM | Last Updated : 11th December 2021 12:31 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவில் அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வரப்படுகிறது.
இந்தப் பள்ளியில் படிக்கும் 2 மாணவா்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அப்பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் 250 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பெற்றோா்களும் உடல்நிலை பாதிப்பு குறித்து சந்தேகம் இருந்தால் தங்களை அணுகுமாறு வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...