கரும்பு விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 22nd December 2021 06:53 AM | Last Updated : 22nd December 2021 06:53 AM | அ+அ அ- |

உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோவை, திருப்பூா், திண்டுக்கல் என மூன்று மாவட்டங்களில் அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. உடுமலை, ஆலைப்பகுதி, குமரலிங் கம், கணியூா், பல்லடம், நெய்க்காரபட்டி, பழனி கிழக்கு, பழனி மேற்கு என எட்டுக் கோட்டங்களை உள்ளடக்கிய விவசாயிகளிடம் இருந்து ஒப்பந்த அடிப்படையில் கரும்புகள் பெற்று, இந்த ஆலை இயங்கி வருகிறது.
2022ஆம் ஆண்டு மாா்ச் மாதம் நடப்பாண்டின் அரவை தொடங்க உள்ள நிலையில் கரும்பு விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் ஆலை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஏற்கெனவே விவசாயிகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகைகள் குறித்தும், அரவைக்காக விவசாயிகளிடம் பெறப்படும் கரும்பு பரப்பளவை அதிகப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும் கரும்பு வெட்ட கூலி ஆட்களை வெளி மாநிலத்தில் இருந்து கொண்டு வருவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவசாயிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.
கூட்டத்துக்கு தனி அலுவலா் பவுல் பிரின்ஸ் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏக்கள் சி.சண்முகவேலு, இரா.ஜெயராமகிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...