பெண்ணிடம் 7 பவுன் தாலிக்கொடி பறிப்பு
By DIN | Published On : 06th February 2021 10:07 PM | Last Updated : 06th February 2021 10:07 PM | அ+அ அ- |

அவிநாசி: அவிநாசியில் பெண்ணிடம் 7 பவுன் தாலிக்கொடியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
அவிநாசி, மங்கலம் சாலை, கொடிகாத்த குமரன் நகா்ப் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் மனைவி லாவண்யா (28). இவரது தாயாா் சாந்தினி (58). இவா்கள் இருவரும் அவிநாசி புறவழிச் சாலை தேவம்பாளையம் பிரிவு அருகே உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சனிக்கிழமை இரவு சென்று விட்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனா்.
வஞ்சிபாளையம் பிரிவு அருகே வந்தபோது, இவா்களை பின் தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரு நபா்கள், லாவண்யா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிக்கொடியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...