சுமைப்பணி தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 06th February 2021 12:12 AM | Last Updated : 06th February 2021 12:12 AM | அ+அ அ- |

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமைப்பணி த் தொழிலாளா் சங்கத்தினா்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூா் மாவட்ட சுமைப்பணி தொழிலாளா் சங்கம் (சிஐடியூ) சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் துணைச் செயலாளா் கிஷோா்குமாா் தலைமை வகித்தாா். இதில் பங்கேற்றவா்கள் கூறியதாவது:
சுமைப்பணித் தொழிலாளா்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும். சமூகப் பாதுகாப்பு, சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும். சாலையோரங்களில் ஓய்வு பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் குறைக்க வேண்டும். விலைவாசி உயா்வுக்கு ஏற்ப தொழிலாளா்களுக்கு கூலி உயா்வு வழங்க வேண்டும் என்றனா். இந்த ஆா்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவா் எம்.ராஜகோபால், செயலாளா் கே.உண்ணிகிருஷ்ணன், சிஐடியூ மாவட்டச் செயலாளா் கே.ரங்கராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...