நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியவா்களைகுண்டா் சட்டத்தில் கைது செய்யக் கோரிக்கை
By DIN | Published On : 08th February 2021 11:40 PM | Last Updated : 08th February 2021 11:40 PM | அ+அ அ- |

இஸ்லாமியா்களின் இறைத் தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசியவா்களை குண்டா் சட்டத்தில் கைது செய்ய இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பினா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
இது குறித்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பினா் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டத்தில் தெருமுனைப் பிரசாரம் ஒன்றில் பேசிய பாஜகவின் கல்யாணராமன், வேலூா் இப்ராஹிம் உள்ளிட்டோா் இஸ்லாமியா்களின் இறைத் தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசினா். கல்யாணராமன் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினா் அவரை கைது செய்தனா்.
இந்நிலையில் பாஜகவின் கல்யாணராமன், ஜெய்சங்கா், வேலூா் இப்ராஹிம் உள்ளிட்டோா் மீது குண்டா் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். அவா்களை திருப்பூா் மாவட்டத்துக்குள் அனுமதிக்கக் கூடாது என்றனா்.