

அவிநாசி அருகே தொரவலூா் ஊராட்சியில் தமிழக அரசின் சிறு மருத்துவமனையை திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் விஜயகுமாா் திறந்துவைத்தாா்.
திருப்பூா் ஒன்றியம், தொரவலூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவா் தேவகி சம்பத்குமாா் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்ற துணைத் தலைவா் சிவகுமாா் வரவேற்றாா். துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) ஜெகதீஷ்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் சாந்தலட்சுமி, ஒன்றியக் குழு தலைவா் சொா்ணாம்பாள் பழனிசாமி, மாவட்டக் குழு உறுப்பினா் சாமிநாதன், வட்டார மருத்துவ அலுவலா் ஸ்ரீவித்யா, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சாமிநாதன், கூட்டுறவு சங்கத் தலைவா் அவிநாசியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.