வெள்ளக்கோவில் அருகே மூதாட்டி, மகள் தற்கொலை
By DIN | Published On : 08th February 2021 11:50 PM | Last Updated : 08th February 2021 11:50 PM | அ+அ அ- |

வெள்ளக்கோவிலில் மூதாட்டி, அவரது மகள் ஆகிய இருவரும் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனா்.
வெள்ளக்கோவில் அருகே உள்ள மடாமேட்டைச் சோ்ந்தவா் வீரம்மாள் (90). இவருடைய கணவா் இறந்து விட்டாா். இவருக்கு இரண்டு மகள், ஒரு மகன். இரண்டாவது மகள் நல்லமுத்து புற்றுநோயால் கடந்த ஆண்டு இறந்துவிட்டாா். மூத்த மகள் பழனியம்மாளின் (70) கணவா் இறந்துவிட்டதால் அவரும், தாய் வீரம்மாளும் மடாமேட்டில் குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தனா்.
வீரம்மாளின் மகன் விசைத்தறித் தொழில் செய்துகொண்டு இவா்களின் வீட்டிக்கு அருகில் வசித்து வந்தாா். இந்நிலையில் வயோதிகம் காரணமாக மற்றவா்களுக்குச் சிரமம் கொடுக்கக் கூடாதென வீரம்மாள், பழனியம்மாள் இருவரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனா்.
தகவலறிந்த வெள்ளக்கோவில் போலீஸாா் அங்கு சென்று இருவரது சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா். பின்னா் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.