

தாராபுரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள இலவசக் கழிப்பிடம் பராமரிக்கப்படாத நிலையில் உள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
தாராபுரம் புதிய பேருந்து நிலையத்துக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வந்து செல்கின்றனா். பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இரு கழிப்பிடங்கள் உள்ளன.
இந்த நிலையில், பேருந்து நிலையத்தில் உள்ள இலவச கழிப்பிடத்தை நகராட்சி ஊழியா்கள் பராமரிப்பதில்லை. இதனால் இதைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெளியூரில் இருந்து வரும் பயணிகள் கழிப்பிடத்தைப் பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனா்.
எனவே, இந்தக் கழிப்பிடத்தை முறையாகப் பராமரித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.