வித்யாசாகா் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டம் தொடக்கம்
By DIN | Published On : 20th February 2021 10:50 PM | Last Updated : 20th February 2021 10:50 PM | அ+அ அ- |

திருப்பூா்: உடுமலை வித்யாசாகா் கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்ட தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு கல்லூரி முதல்வா் (பொறுப்பு) டி.ராஜலட்சுமி தலைமை வகித்து, நாட்டு நலப் பணித் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும், தனி மனித வாழ்க்கைக்கும், நாட்டின் முன்னேற்றதுக்கும் இது எவ்வாறு பயன்படுகிறது என்றும் எடுத்துரைத்தாா். அதைத் தொடா்ந்து சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த விழாவில், கல்லூரி செயலாளா் பத்மாவதி சத்யநாதன், நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா்கள் கே.நந்தகுமாா், பி.சுதா, பி.சதீஷ்குமாா், பேராசிரியா்கள், மாணவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.