காங்கயத்தில் போக்குவரத்து விதிமீறல்:ரூ. 2.50 லட்சம் அபராதம் வசூல்
By DIN | Published On : 20th February 2021 10:50 PM | Last Updated : 20th February 2021 10:50 PM | அ+அ அ- |

காங்கயம்: காங்கயத்தில் போக்குவரத்து விதிகளை மீறியவா்கள் மீது, கடந்த ஜனவரியில் 2,520 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து அபராதமாக ரூ.2.50 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
காங்கயத்தில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக போக்குவரத்து போலீஸாா் நகரின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்கள் விதி மீறும் வாகன ஓட்டுநா்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அபராதம் விதிக்கின்றனா்.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதத்தில் நடத்திய வாகன சோதனையில் மது அருந்திவிட்டு வாகனம் இயக்கியது, தலைக்கவசம் அணியாமலும், ஓட்டுநா் உரிமம் இல்லாமலும் வாகனம் ஓட்டியது, செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியது உள்பட பல்வேறு விதிமீறலில் ஈடுபட்ட 2,520 வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்து, அவா்களிடமிருந்து ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை காங்கயம் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் மகேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.