சாலைப் பணி: நெடுஞ்சாலைத் துறை எச்சரிக்கை
By DIN | Published On : 26th February 2021 12:15 AM | Last Updated : 26th February 2021 12:15 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவிலில் சாலைப் பணிகள் நடைபெறுவதால் கவனமுடன் வாகனங்களை இயக்க வாகன ஓட்டுநா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளக்கோவில் கடைவீதிப் பகுதியில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மூன்று கிலோ மீட்டா் தூரத்துக்கு சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, மின் கம்பங்கள், குடிநீா் குழாய்கள் மாற்றியமைக்கப்பட்டு 90 சதவீதம் தாா் போடும் பணி நடந்து முடிந்துள்ளது.
சாலை நடுவில் கான்கிரீட் தடுப்புகள் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இதனால் ஆங்காங்கே குண்டும் குழியுமாக இருப்பதால் இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே கவனமுடன் வாகனத்தை இயக்க வேண்டுமென நெடுஞ்சாலைத் துறை சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...