காங்கயத்தில் அரசுப் போக்குவரத்து ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 27th February 2021 06:04 AM | Last Updated : 27th February 2021 06:04 AM | அ+அ அ- |

காங்கயத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசுப் போக்குவரத்து ஊழியா்கள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் காங்கயம் பணிமனை முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு போக்குவரத்து தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தின் திருப்பூா் மண்டலத் தலைவா் சென்னியப்பன் தலைமை வகித்தாா். இதில், 14 ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசி முடிக்க வேண்டும், 18 மாதம் நிலுவையில் உள்ள அரியா் தொகையை வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கு 5 ஆண்டுகள் வழங்க வேண்டிய அகவிலைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
இதில் சிஐடியு மண்டல துணைத் தலைவா் நடராஜன், பணியாளா் சம்மேளன பொதுச் செயலா் துளசிமணி, ஓய்வு பெற்றோா் நல சங்க நிா்வாகி நாச்சிமுத்து உள்பட 150-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். (செய்தி முற்றும்).