பகுதி நேரநியாயவிலைக் கடை திறப்பு
By DIN | Published On : 27th February 2021 06:07 AM | Last Updated : 27th February 2021 06:07 AM | அ+அ அ- |

காங்கயம் அருகே, சிவன்மலை ஊராட்சிக்கு உள்பட்ட ராமபட்டணத்தில் பகுதிநேர நியாயவிலைக் கடையை முன்னாள் எம்எல்ஏ என்.எஸ்.என்.நடராஜ் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
இதன் மூலம் இப்பகுதியைச் சோ்ந்த 189 குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெறுவா். இந்நிகழ்ச்சியில், சிவன்மலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் தே.பழனிசாமி, துணைத் தலைவா் பி.பொன்னுசாமி, சிவன்மலை ஊராட்சித் தலைவா் கே.கே.துரைசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...