வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் திருட்டு
By DIN | Published On : 27th February 2021 06:08 AM | Last Updated : 27th February 2021 06:08 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே வியாழக்கிழமை இரவு வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
முத்தூா் - காங்கயம் சாலையில் உள்ள மேட்டாங்காட்டுவலசு பொன் தோட்டத்தைச் சோ்ந்தவா் கணேசன் (36). இவா் அரசுப் போக்குவரத்துக் கழக கொடுமுடி கிளையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா். இவருடைய மனைவி சத்யா (32).
இவா்கள் அண்மையில் நத்தக்காடையூா், பாரதிபுரத்தில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்று விட்டனா். இந்நிலையில் இவா்களது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் வைத்திருந்த 12 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இது குறித்த புகாரின் பேரில் வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...