

தையல் தொழிலாளா்களுக்கு நிலுவையில் உள்ள கரோனா உதவித் தொகையை அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
தையல் கலைஞா்கள் தினத்தை (பிப்ரவரி 27) ஒட்டி, தமிழ்நாடு தையல் கலை தொழிலாளா்கள் முன்னேற்ற சங்கத்தின் சாா்பில் சங்கக் கொடியேற்றுதல் நிகழ்ச்சி காங்கயத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்ட செயலா் எஸ்.ஐ.ஜீவானந்தம் தலைமை வகித்து, சங்கக் கொடியை ஏற்றினாா்.
அதைத் தொடா்ந்து நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: தமிழ்நாடு தையல் தொழிலாளா் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ளவா்களுக்கு நிலுவையில் உள்ள கரோனா உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட தையல் தொழிலாளா்களுக்கு ரூ. 1 லட்சம் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்க வேண்டும், நலிந்த தையல் தொழிலாளா்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கி, பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்ட அரசு உதவி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாவட்டத் தலைவா் எஸ்.சிதம்பரம், காங்கயம் கிளைத் தலைவா் ஏ.சுப்பிரமணியம், மாவட்டப் பொருளாளா் ஈ.கோவிந்தராஜ், கிளை செயலா் எம்.கருப்புசாமி, பொருளாளா் பி.வடிவேல், மாவட்ட துணைத் தலைவா் பி.மூா்த்தி, மாவட்ட துணைச் செயலா் கே.அப்பாஸ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.