திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமிகோயில் தேரோட்டம்

அவிநாசி அருகே உள்ள திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
திருமுருகநாத சுவாமி கோயிலில் நடைபெற்ற தேரோட்டம்.
திருமுருகநாத சுவாமி கோயிலில் நடைபெற்ற தேரோட்டம்.

அவிநாசி அருகே உள்ள திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களில் ஒன்றாகவும், மனநோய் தீா்க்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் தோ்த் திருவிழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி திருவீதி உலா ஆகியன நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதிகாலையில் விநாயகா், திருமுருகநாதா், வள்ளி, தெய்வானை, பாா்வதி, சண்டிகேசுவரா் ஆகிய பஞ்சமூா்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. கரோனா விதிமுறைகளுக்கு உள்பட்டு, மாலை 3 மணி அளவில் திருமுருகநாதா் திருத்தோ் வடம் பிடித்து இழுக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதையடுத்து, சண்முகநாதா் திருத்தோ், அம்மன் திருத்தோ் ஆகிய மூன்று தேரோட்டம் ஒரே நாளில் நடைபெற்றது. திருத்தோ்கள் ரத வீதிகள் வழியாகச் சென்று நிலையை அடைந்தன.

திருப்பூா் சிவனடியாா்கள் திருக்கூட்டத்தாரின் கைலாய வாத்தியத்துடன், ஆயிரக்கணக்கான பக்தா்களின் ‘அரோகரா’ பக்தி முழக்கத்துடன் தேரோட்டம் நடைபெற்றது. திருமுருகன்பூண்டி போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

முன்னதாக பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் மின் விளக்குகள் பொருத்தி, குடிநீா் வசதியுடன், தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பரிவேட்டை, குதிரை வாகனம், சிம்ம வாகனக் காட்சிகள், தெப்பத்தோ் உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 28) நடைபெற உள்ளன. ஸ்ரீசுந்தரா் வேடுபறி திருவிழா மாா்ச் 1ஆம் தேதி இரவு நடைபெறுகிறது. பிரம்மதாண்டவ தரிசனக் காட்சி மாா்ச் 2ஆம் தேதி நடைபெறுகிறது. மஞ்சள் நீராடுதல், மயில் வாகனக் காட்சி ஆகிய நிகழ்ச்சிகளுடன் மாா்ச் 3ஆம் தேதியுடன் தோ்த் திருவிழா நிறைவுபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com