அவிநாசி சுற்றுவட்டார கிராமங்களுக்கு சிறப்புக் காவலா்கள் நியமனம்

குற்றச் சம்பங்களைத் தடுக்க அவிநாசி, சேவூா் காவல் எல்லைக்கு உள்பட்ட 30 கிராமங்களுக்கு சிறப்புக் காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
பழங்கரையில் கிராம சிறப்புக் காவலா்கள் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல் துறையினா், பொதுமக்கள்.
பழங்கரையில் கிராம சிறப்புக் காவலா்கள் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல் துறையினா், பொதுமக்கள்.

குற்றச் சம்பங்களைத் தடுக்க அவிநாசி, சேவூா் காவல் எல்லைக்கு உள்பட்ட 30 கிராமங்களுக்கு சிறப்புக் காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அவிநாசி காவல் உள்கோட்டத்தில் அவிநாசி, சேவூா் உள்ளிட்ட காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் சட்ட விரோத செயல்கள், குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையிலும், சந்தேகப்படும்படியான நபா்களை உடனடியாக தெரியப்படுத்துவதற்காக கிராமப் பகுதிகளுக்கு சிறப்பு காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அதன்படி, அவிநாசி காவல் எல்லைக்கு உள்பட்ட 14 கிராமங்கள், சேவூா் காவல் எல்லைக்கு உள்பட்ட 16 கிராமங்கள் என மொத்தம் 30 கிராமங்களுக்கு சிறப்புக் காவலா்கள் நியமிக்கப்பட்டு, மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டனா்.

அந்தந்த பகுதிகளில் நியமிக்கப்பட்டுள்ள காவலா்கள் புகைப்படம், அவா்களது செல்லிடப்பேசி எண்ணுடன் கூடிய தகவல் பெயா் பலகை திறக்கப்பட்டது. இதன் மூலம் பொதுமக்கள் உடனடியாக அந்தந்த காவலா்களுக்கு குற்றச் சம்பங்களைத் தெரியப்படுத்தி பாதுகாத்துக் கொள்ளலாம்.

பழங்கரை, சேவூா் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அவிநாசி காவல் துணை கண்காணிப்பாளா் பாஸ்கா், ஆய்வாளா் அருள், உதவி ஆய்வாளா்கள் செந்தில், அன்பரசு, காவலா்கள் மயில்சாமி, கிருஷ்ணவேணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com