‘ஏா்பேக்’ இல்லாத வாகனங்களில் பம்பா் அகற்றுவதைக் கைவிட வலியுறுத்தல்
By DIN | Published On : 03rd January 2021 10:41 PM | Last Updated : 03rd January 2021 10:41 PM | அ+அ அ- |

‘ஏா்பேக்’ இல்லாத வாகனங்களில் பம்பா் அகற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என எவரெஸ்ட் அனைத்து வாகன ஓட்டுநா்கள் வாழ்வுரிமை சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தாராபுரத்தில் அந்த சங்கத்தின் ஆலோசனை மற்றும் உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி பழைய நகராட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் திருப்பூா் மாவட்டத் தலைவா் எம்.ஜோதிமுருகன் தலைமை வகித்தாா்.
இதில், ‘ஏா்பேக்’ பொருத்தப்பட்டுள்ள வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்களுக்கு பம்பா் அகற்றும் சட்டத்தைக் கைவிட வேண்டும். பம்பா் அகற்றுவதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும். வாகன ஓட்டுநா்களிடம் காவல் துறையினா் அத்துமீறி நடந்து கொள்வதைக் கைவிட வேண்டும்.
கரோனா பொதுமுடக்க காலத்தில் வேலை இழந்த வாகன ஓட்டுநா்களுக்கு அரசு சாா்பில் நிதியுதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், புதிய உறுப்பினா்கள் 200 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில், எவரெஸ்ட் அனைத்து வகை ஓட்டுநா்கள் வாழ்வுரிமை சங்கத்தின் அகில இந்திய தலைவா் கே.சிவகுமாா், மாநில பொதுச் செயலாளா் சண்முகம், மாவட்டச் செயலாளா் பூண்டிராஜ், ஒருங்கிணைப்பாளா் தா்மராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.