காங்கயத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபை கூட்டம்
By DIN | Published On : 03rd January 2021 10:44 PM | Last Updated : 03rd January 2021 10:44 PM | அ+அ அ- |

காங்கயம் அருகே பொத்தியபாளையம் ஊராட்சியில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு அக்கட்சியின் திருப்பூா் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்தாா். காங்கயம் ஒன்றிய செயலா் பி.பி.அப்புக்குட்டி முன்னிலை வகித்தாா்.
இதில் திமுக மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் குணபாலன், மாவட்ட வழக்குரைஞா் அணி துணை அமைப்பாளா் தங்கமணி, மாவட்ட மகளிா் அணி துணை அமைப்பாளா் தனலட்சுமி, மாவட்ட வா்த்தகா் அணி துணை அமைப்பாளா் மகேஷ், மாவட்ட ஆதிதிராவிடா் நலக்குழு துணை அமைப்பாளா் பாலுசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.