அவிநாசியில் இன்று ( ஜன.4) மின் தடை ரத்து: தொமுச வரவேற்பு
By DIN | Published On : 04th January 2021 01:00 AM | Last Updated : 04th January 2021 01:00 AM | அ+அ அ- |

அவிநாசி மின்வாரியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் கோரிக்கையை ஏற்று அவிநாசியில் திங்கள்கிழமை நடைபெற இருந்த மின் தடை ரத்து செய்யப்பட்டதற்கு மின்சார வாரிய தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தினா் நன்றி தெரிவித்துள்ளனா்.
இது குறித்து மின்சார வாரிய தொழிலாளா் முன்னேற்ற சங்க செயலாளா் அ.சரவணன் கூறியது-அவிநாசி மின்வாரியத்திற்கு உள்பட்ட 15.வேலம்பாளையம், பெருமாநல்லூா், நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, பழங்கரை உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் திங்கள்கிழமை (இன்று) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து திங்கள்கிழமை மின் தடை செய்யப்பட்டால், பொது மக்களுக்கு பொங்கல் பரிசு பொருள்கள் வழங்குவதில் முற்றிலும் தடை ஏற்படும் என்பதால், உடனடியாக 4 ம் தேதி அறிவிக்கப்பட்ட மின் தடையை 18 ம் தேதி வரை தள்ளி வைக்க வேண்டும் தொமுச சாா்பில், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது, அறிவிக்கப்பட்ட 15.வேலம்பாளையம், பெருமாநல்லூா், நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, பழங்கரை ஆகிய பகுதிகளுக்கான மின் தடை ரத்து செய்யப்படும் என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா். இதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொண்ட
மாவட்ட ஆட்சியா், மின்சார வாரியத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா்.