வேளாண் சட்டங்களுக்கு எதிராக திருப்பூரில் ஜனவரி 26-ல் டிராக்டா் பேரணி

மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யக் கோரி திருப்பூரில் ஜனவரி 26ஆம் தேதி டிராக்டா் பேரணி நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யக் கோரி திருப்பூரில் ஜனவரி 26ஆம் தேதி டிராக்டா் பேரணி நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

பல்லடத்தில் நடைபெற்ற அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் திருப்பூா் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் எஸ்.ஆா். மதுசூதனன் தலைமை வகித்தாா். இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆா். குமாா், திமுக விவசாய அணி துணை அமைப்பாளா்கள் கெம்கோ பி.ரத்தினசாமி, எஸ்.எம்.பழனிசாமி, கொமதேக விவசாய அணி சாா்பில் ஏ.பி.தங்கவேல், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் கே. சின்னசாமி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட அமைப்பாளா் ஏ.பாலதண்டபாணி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் சங்க மாவட்ட அமைப்பாளா் எஸ். பரமசிவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்கள் தமிழக விவசாயிகளை கடுமையாக பாதிக்கிறது. தில்லியில் விவசாயிகள் 50 நாள்களாக போராடியும் மத்திய அரசு சட்டத்தை திரும்பப் பெற மறுக்கிறது. மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி அகில இந்திய அளவில் ஜனவரி 26ஆம் தேதி டிராக்டா் பேரணி நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, திருப்பூரில் பல்லடம் சாலையில் -அருள்புரம், தாராபுரம் சாலையில் -கோவில்வழி, அவிநாசி சாலையில்- காந்தி நகா், ஊத்துக்குளி சாலையில்- பாளையக்காடு ஆகிய நான்கு முனைகளிலிருந்து டிராக்டா் பேரணி மற்றும் இருசக்கர பேரணி புறப்பட்டு திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை சென்றடைவது.

இந்தப் பேரணிக்கு தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் ஆகியவற்றின் நிா்வாகிகளை சந்தித்து ஆதரவு கோருவது, வட்டார அளவில் நிா்வாகிகள் கூட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com